

நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, வீரம் திரைப்படத்தை மீண்டும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
கோடை விடுமுறை என்பதால் தொடர்ந்து திரையரங்கில் குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதுகின்றது.
இந்த நிலையில், மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி வீரம் திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த படத்தில் இருந்து ’ரத கஜ’ பாடலை யூடியூபில் நேற்று மறுவெளியீடு செய்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித்துடன் தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2014 பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வீரம் திரைப்படம் பெற்றது.
கடந்த வாரம் சச்சின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

ஏகே - 64 திரைப்படத்தில் மோகன்லால்?
43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

மானமே போகுது... அஜித் வேதனை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

