சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3 ஒரேநாளில் வெளியாகுவது குறித்த கேள்விக்கு தன்னடக்கமானப் பதிலை நானி அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ரெட்ரோ மே.1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதே தேதியில் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நடிகர் நானியின் ஹிட் 3 படமும் வெளியாகவிருக்கிறது. அதனால், இரண்டு படங்களுக்கும் போட்டியா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு நடிகர் நானி கூறியதாவது:
போட்டி அல்ல பார்ட்டி
இது நிச்சயமாகப் போட்டி கிடையாது, ஆனால் ரசிகர்களுக்கு பார்டியாக (விருந்து) இருக்கும். நாம் திரையரங்கிற்கு படங்களைக் கொண்டாட வருகிறோம். ரசிகர்களுக்கு இந்தாண்டு சிறப்பாக இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு ரெட்ரோ முதன்மையான தேர்வாக இருக்கும். சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் மீது அதிகமான அன்பும் அவர்களது படங்கள் மீது மதிப்பு இருக்கின்றன. சந்தோஷ் நாராயணன் இசை வேறு. நிச்சயமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார்கள் என நம்புகிறேன்.
ரெட்ரோ படம் பார்த்துவிட்டு ஹிட் 3 வந்தீர்களானால், நிச்சயமாக நல்ல அனுபவத்தை அளிப்போம் என உறுதி அளிக்கிறேன்.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மே.1ஆம் தேதி வெளியாகும் இந்தியா முழுவதும் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் நானியின் தி பாரடைஸ் டீசர் வெளியீட்டுத் தேதி!
ஆக.2-ல் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழா! எங்கு தெரியுமா?

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூர்யாவின் கருப்பு திரைப்படம்!

நடிகர் நானியின் பாரடைஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



