திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பிரபல பாடகர் - நடிகர்!

கோமாளியாகப் பங்கேற்கவுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு.

News image

பூவையார் - இன்ஸ்டாகிராம்

Updated On :28 ஏப்ரல் 2025, 4:57 pm IST

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான பூவையார் பங்கேற்கவுள்ளார். சமையல் கலைஞராக அல்லாமல், கோமாளியாகப் பங்கேற்கவுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கானா பாடல்கள் மூலமும் இயல்பான நடிப்பின் மூலமும் மக்களைக் கவர்ந்த பூவையார், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது குறும்புத்தனங்கள் மூலம், மேலும் வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதன் முன்னோட்ட விடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் முந்தைய கோமாளிகளுடன் புதிதாக இணையவுள்ள கோமாளிகள் குறித்த அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்து வருகிறது.

அந்தவகையில் முந்தைய சீசன்களில் கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, சரத், ராமர் உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கோமாளிகளாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் இம்முறை நடிகை செளந்தர்யாவும் இணைந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான செயல்கள் மூலம் மக்களைக் கவர்ந்த செளந்தர்யா, கோமாளியாக செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருக்கும் என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

இதனிடையே இந்தப் பட்டியலில் தற்போது பாடகரும் நடிகருமான பூவையாரும் இணைந்துள்ளார். பிகில், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் பூவையார் நடித்திருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய இலக்கில் புதிய வாய்ப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாய்ப்பு பூவையாருக்கு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன் கெளசிக் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை புத்துணர்ச்சி நிறைந்த ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.