மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் நடிகை லக்‌ஷ்மி பிரியா!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.

லக்‌ஷ்மி பிரியா - இன்ஸ்டாகிராம்

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் (10வது சீசன்) புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் இவர், பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பதிலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.

லக்‌ஷ்மி பிரியா

லக்‌ஷ்மி பிரியா - இன்ஸ்டாகிராம்

தன்னுடைய இயல்பான நகைச்சுவை திறனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சியாக மாற்றியவர் பிரியங்கா.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து, பிரியங்கா அடிக்கும் லூட்டிகளும் குறும்புத்தனங்களும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறலாம்.

அதோடு மட்டுமின்றி மாகாபா ஆனந்த் - பிரியங்கா கூட்டணிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதோடு மட்டுமின்றி, விருது நிகழ்ச்சிகளையும், திரைப்பட விழாக்களையும் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு பதிலாக நடிகை லக்‌ஷ்மி பிரியா களமிறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்றதால், அவருக்கு ஓய்வு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Story image

dinamani

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராகியுள்ள லக்‌ஷ்மி பிரியா, பிரியங்காவைப் போன்று மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்குவாரா? அவரின் இடத்தை நிரப்புவாரா? என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தன்னுடையே சினிமா இலக்கில் புதிய வாய்ப்பைப் பெற்றுள்ள லக்‌ஷ்மி பிரியா, அதற்குரிய உழைப்பை அளித்து மக்களை மகிழ்விப்பார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.