விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?

இம்முறை 4 பேர் புதிய கோமாளிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

News image

பூவையார், செளந்தர்யா, சர்ஜின், டோலி - இன்ஸ்டாகிராம்

Updated On :28 ஏப்ரல் 2025, 4:54 pm IST

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்முறை 4 கோமாளிகள் புதிதாகப் பங்கேற்கவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சமையல் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கொடுப்பதால், மக்களிடம் இந்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 5 சீசன்களாக மக்களை சிரிக்கவும் சமைக்கவும் வைத்த இந்த நிகழ்ச்சி, 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் பங்கேற்கும் கோமாளிகளே இந்த நிகழ்ச்சியின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் புகழ், ராமர், சரத், சுனிதா ஆகியோர் கடந்த சீசனைத் தொடர்ந்து இம்முறையும் கோமாளிகளாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் இம்முறை 4 பேர் புதிய கோமாளிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

4 புதிய கோமாளிகள்

4 புதிய கோமாளிகள் - இன்ஸ்டாகிராம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பெற்ற செளந்தர்யா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்கள் மூலம் மக்களைக் கவர்ந்து படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களைப் பெற்ற பூவையார், கன்னியாகுமரியின் மைந்தனாக யூடியூபில் பிரபலமான சர்ஜின். நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓம் காளி ஜெய் காளி என்ற இணையத் தொடரில் வில்லனின் இளமைப் பருவ பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இதேபோன்று விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான டோலியும் கோமாளியாகப் பங்கேற்கிறார்.

Story image

இந்த சீசனில் புதிதாக களமிறக்கப்பட்டுள்ள 4 கோமாளிகளும் ஏதோவொரு வகையில் மக்களிடம் பிரபலமடைந்துள்ளதால், அவர்களை நகைச்சுவை பாணியில் வேறு விதத்தில் நிகழ்ச்சியில் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.