கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு?

சிம்பு - சுதா கொங்காரா படம் குறித்து...

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 12:02 pm IST

நடிகர் சிம்பு இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்காராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு புறநானூறு எனப் பெயரிடப்பட்டது.

சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து பராசக்தி படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், பராசக்தி படத்தை முடித்தபின் எழுத்தாளர் நரன் எழுதிய ‘வேட்டை நாய்கள்’ நாவலை சுதா கொங்காரா படமாக்க உள்ளதாகவும் இதில் நாயகனாக சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, சிம்பு தன்னுடைய 49, 50, 51 ஆவது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மத்தியில் நிறைவடைந்தபின் சுதா கொங்காரா படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.