/

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அஜித் குமார், வீடு திரும்பினார்.

News image

நடிகர் அஜித் குமார் - படம் | எக்ஸ்

Updated On :30 ஏப்ரல் 2025, 9:01 pm IST

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குமார், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று (ஏப். 30) காலை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தில்லியில் பத்ப பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டு நேற்று மாலை சென்னைக்குத் திரும்பிய அஜித் குமாருக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டிருந்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித் வீடு திரும்பினார் எனத் தெரிகிறது.

முன்னதாக, தில்லியில் இருந்து திரும்பிய பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அஜித் குமார், விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும், அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், விரைவில் சந்தித்துப் பேசுவோம் எனக் குறிப்பிட்டிருந்தார். விருது பெற்ற பிறகு ஒரு சில ஆங்கில ஊடகங்களுக்கு அஜித் குமார் நேர்காணல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.