மார்வெல் ஸ்டூடியோஸின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அடுத்தாண்டு மறுவெளியீட்டுக்கு வரவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஜோ ரூஸோ மற்றும் அந்தோணி ரூஸோ இயக்குநர்களின் இயக்கத்தில் 2019-ல் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மறுவெளியீட்டுக்கு வரவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
2019 ஏப்ரல் 26 ஆம் தேதியில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், உலகளவில் 2.799 பில்லியன் டாலர் வசூலித்து, அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற சாதனை படைத்தது.
இருப்பினும், தமிழ் மொழியில் அவெஞ்சர்ஸ் படங்களின் முந்தைய பாகங்களில் பணியாற்றிய டப்பிங் கலைஞர்கள் குழுவை மாற்றி, விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட புதிய குழுவினர் குரல் கொடுத்ததால், தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டதாகக் கூறினர்.
இந்த நிலையில், அடுத்தாண்டு செப்டம்பர் 26 ஆம் தேதியில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மறுவெயீட்டுக்கு வரவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மறுவெளியீட்டிலாவது, முந்தைய குரல் கலைஞர்கள் குழு வெர்ஷன் வருமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதையும் படிக்க: ரூ.7.44 லட்சம் கோடி! வார்னர் பிரதர்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.