

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ஷங்கரவரபிரசாத் காரு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் பெரிதாக வெற்றிப் படங்கள் அமையாமல் இருக்கின்றன.
இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.
அடுத்ததாக, இவர் நடித்துள்ள விஸ்வாம்பரா திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. யுவி கிரியேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவரது 157-ஆவது படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.
தெலுங்கில் வெளியான எஃப் 2, எஃப் 3, பகவந்த் கேசரி என்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களின் மூலம் அனில் ரவிபுடி பிரபலமானார்.
சமீபத்தில் வெளியான இவரது சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படம் ரூ.230 கோடியை தாண்டி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ள ஷங்கரவரபிரசாத் காரு அடுத்தாண்டு சங்கராத்திக்கு (பொங்கல் விழா) வெளியாகுமென நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.