

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒன்றுகூடி சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய பிறகும், நட்பு தொடருவது ஆரோக்கியமானதாக உள்ளதாக ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்ததும் ஒரு காரணமாக இருந்தது.
இதோடுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்ததாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயல்பட்டதாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்களாயினர்.
பிக் பாஸ் சீசன் 3 க்கு பிறகு, அதிக ரசிகர்களைப் பெற்ற நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 8 மாறியது. அதோடுமட்டுமின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் அடுத்தடுத்து தங்கள் துறைகளில் முன்னேறி வருகின்றனர். இதனால் நேர்மறையான உணர்வுகள் இவர்களிடம் எழுவதாக ரசிகர்கள் கருதுவதுண்டு.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் பலர் ஒன்றுகூடி சந்தித்துள்ளனர். விஜே விஷால், அருண் பிரசாத், ராணவ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இதேபோன்று சுனிதா கோகோய், அன்ஷிதா மற்றும் பிரியங்கா சந்தித்து தங்கள் நட்பை பகிர்ந்துள்ளனர். (பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்றவர்.)
இது தொடர்பான புகைப்படங்களை தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.