

ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா முரளிதரன். அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது, இவர் புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்தத் தொடரில் நடிகர் ரேஷ்மா முரளிதரன் உடன் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கவுள்ளார்.
செல்லமே செல்லம் என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று முன்னோட்டக் காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொடரில் அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரிந்த கனவன் மற்றும் மனைவிக்கு இடையே நிகழும் கதையாக இருக்கும் என்று முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.
மக்கள் மத்தியில் பிரபலமான அனுமன் தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுவதால், அனுமன் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படும் என்றே தெரிகிறது.
வழக்கமாக, சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஆன்மிகத் தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், செல்லமே செல்லம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.