
நடிகை ரகுல் பிரீத் சிங் பழக்கப்பட்ட சூழல் நமக்கு எதிரியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தமிழில் அருண் விஜய் உடன் தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங் கூறியதாவது:
பழக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேறுங்கள்
சௌகரியமான பழக்கப்பட்ட இடம் (கம்பர்ட் ஜோன்) உங்களது எதிரி. ’பழக்கப்பட்ட இடம் அழகாக இருக்கும். ஆனால், அங்கு எதுவுமே வளராது’ என யாரோ சொல்லியிருக்கிறார்கள். மக்கள் சோம்பேறியாக இருக்க முக்கியமான காரணம் அவர்களுக்கு அனைத்துமே நாளைக்கும் வேண்டும் என நினைப்பதுதான். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சௌகரியமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் சென்று கொண்டிருப்பதில் இருந்து எதையும் மாற்ற விரும்புவதில்லை.
தினமும் செய்யும் ஒரு விஷயம் உங்களுக்கு எளிமையாக இருக்கலாம். ஆனால், அது உங்களுக்கு எந்த வளர்ச்சியையும் தராது.
வளர்ச்சி வேண்டுமானால் நீங்கள் உங்களது பழக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியே வர வேண்டும். கடினமான விஷயங்களை செய்ய வேண்டும்.
என்னுடைய கதாபாத்திரம் அன்டாரா மிகவும் வலிமையான பெண், அதிகமாக தன்னையே நேசிப்பவள். புதியதை விரும்பும் பெண். அதிகமாக விளையாட்டை நேசிக்கும் பெண் இவள் எனக் கூறியுள்ளார்.
காதல், நகைச்சுவை திரைப்படம்
பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ’மேரே அஸ்பண்ட் கி பிவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை முடாசர் அசிஜ் இயக்கியுள்ளார்.
இது ஒரு முக்கோண காதல் கதையாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பிப்.21ஆம் தேதி வெளியாகிறது.
கடந்தாண்டு பிப்ரவரியில் தயாரிப்பாளரும் நடிகருமான ஜக்கி பக்னானியை திருமணம் செய்தார்.
கடைசியாக இந்தியன் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இந்தியன் 2, டி டி பியார் டி2 ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.