நடிகர் பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தமன். இடைவெளிவிட்டு தமிழிலும் இசையமைத்து வருகிறார். நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்து வரவேற்பையும் பெற்றார்.
இவர் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். முக்கியமாக, இறுதியாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மகாராஜ் உள்ளிட்ட படங்களுக்கு பின்னணி இசைக்காக கவனம் பெற்றார்.
இதையும் படிக்க: எந்த விபத்தும் ஏற்படவில்லை; நலமுடன் இருக்கிறேன்: யோகி பாபு
தற்போது, அகண்டா - 2 படத்திற்கு இசையமைக்கும் பணியில் இருக்கிறார். இந்த நிலையில், தன் படங்களுக்கு வெற்றிக்கு பெரிய பங்காற்றியதற்காக தமனுக்கு போர்சே சொகுசு கார் ஒன்றை பாலகிருஷ்ணா பரிசாக வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.