கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஜினியைச் சந்தித்த உறியடி விஜய் குமார்!

ரஜினியுடன் உறியடி விஜய் குமார்...

News image
Updated On :25 பிப்ரவரி 2025, 6:46 am

நடிகர் ரஜினிகாந்த்தை உறியடி விஜய் குமார் சந்தித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூலி படத்தை மே மாத வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜய் குமார் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “இறுதியாக ரஜினி சாரை சந்தித்தேன். கூலி படப்பிடிப்பு தளத்தில் பார்த்து ஆசி வாங்கியது வாழ்நாளுக்குமான தருணம். லவ் யூ தலைவா. நண்பன் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.