சின்ன திரை நாயகி மதுமிதா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
காசிக்குச் சென்றுள்ள அவர், சிவன் கோயில்களில் தரிசனம் செய்த விடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக நடித்துவருபவர் நடிகை மதுமிதா. இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் பாகம் 1-ல் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.
இத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது அய்யனார் துணை என்ற தொடரில் நாயகியாக நடித்துவருகிறார்.
இவர் இத்தொடரில் நடிக்க ஒப்பந்தமான பிறகே எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி நாயகியாக நடித்துவருகிறார்.

அய்யனார் துணை தொடரில்... - இன்ஸ்டாகிராம்
படப்பிடிப்பு இல்லாத நாள்களில், பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்ட மதுமிதா, சமீபத்தில் இலங்கைக்குச் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்குச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க | பவித்ரா தொடரில் நடிக்கும் நெஞ்சத்தைக் கிள்ளாதே நாயகி!
சிவராத்திரியையொட்டி தனது குடும்பத்துடன் காசிக்குச் சென்றுள்ள அவர், சிவன் கோயில்களில் வழிபாடு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் விடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கையில் ஆஞ்சனேயர் பாதம் பட்ட இடத்திற்குச் சென்று வழிபாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆஞ்சனேயர் கோயிலில் மதுமிதா - இன்ஸ்டாகிராம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

திருமணமாகி 8 ஆண்டுகள்... ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறிய ஆல்யா - சஞ்சீவ்!

சாகசம் செய்து பிறந்த நாள் கொண்டாடிய நடிகை மதுமிதா!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


