மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குட் பேட் அக்லி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

குட் பேட் அக்லியின் புதிய அறிவிப்பு வெளியானது...

News image
Updated On :6 ஜனவரி 2025, 11:41 am

DIN

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துள்ளார். படப்பிடிப்பு துவங்கும்போதே இந்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என கூறியிருந்தனர்.

ஆனால், முதலில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் பொங்கல் வெளியீட்டை குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. தற்போது, விடாமுயற்சியும் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவில்லை.

Story image

இந்த நிலையில், குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான, போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.