பாகுபலி - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!

பாகுபலி - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!

புஷ்பா - 2 படத்தின் தற்போதைய வசூலை அறிவித்துள்ளனர்...
Published on

புஷ்பா - 2 திரைப்படத்தின் வசூல் பாகுபலி - 2 படத்தின் வசூலை கடந்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலககளவில் ரூ.1,831 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படக்குழுவினர் சில சர்ச்சைகளைச் சந்தித்தாலும் படத்தின் வணிகத்திற்கு எந்தப் பாதிப்பும் நிகழவில்லை,

இந்திய சினிமாவிலேயே அதிவேகமாக ரூ.1,800 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்கிற சாதனையையும் புஷ்பா 2 திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான புஷ்பா 2 ராஜமௌலியின் பாகுபலி - 2 வசூலான ரூ. 1790 கோடியைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுவரை அதிகம் வசூலித்த இந்தியப் படங்களில் தங்கல் (ரூ. 2000+ கோடி) முதலிடத்திலும் புஷ்பா - 2 இரண்டாம் இடத்திலும் பாகுபலி - 2 மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com