

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் காதலிக்க நேரமில்லை இசைவெளியீட்டு நிகழ்வில் அனிருத்துக்கு அறிவுரை வழங்கினார்.
நடிகர்கள் ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில், படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, நித்யா மெனன் இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: புஷ்பா - 2: கூடுதல் 20 நிமிடக் காட்சிகள் சேர்ப்பு!
நிகழ்வில் பேசிய ஏ. ஆர். ரஹ்மான், "அனிருத் மிக நன்றாக இசையமைக்கிறார். முன்பு 10 இசையமைப்பாளர்கள் என்றால் இன்று 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களுடன் போட்டிபோட்டு பெரிய படங்களில் இசையமைத்து வெற்றிபெறுகிறார். திறமையில்லாமல் இது சாத்தியமில்லை.
அனிருத்துக்கு ஒரே ஒரு அறிவுரை மட்டும் கூற விரும்புகிறேன். நீங்கள் கிளாசிக்கல் இசையை இன்னும் அதிகமாகக் கற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தியும் பாடல்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால், நீண்ட காலத்திற்கு இருக்கலாம். உங்கள் மூலம் இளம் தலைமுறைக்கு சென்று சேரும்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.