/

பிக் பாஸ் வீட்டில் முதல்முறை நடந்த நேர்காணல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல்முறையாக நேர்காணல் நடைபெற்றுள்ளது.

News image

செளந்தர்யா / பவித்ரா - படம் |எக்ஸ்

Updated On :15 ஜனவரி 2025, 5:39 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல்முறையாக நேர்காணல் நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இருக்கும் போட்டியாளர்களிடம் நெறியாளர் ஒருவர் நேர்காணல் செய்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் இறுதியாகியுள்ளனர். இவர்களில் ரயான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மற்ற 7 பேரில் 4 பேர் இறுதிக்கு முன்னேறவுள்ளனர்.

இதனிடையே 100வது நாளான நேற்று (ஜன. 14) பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி எடுக்கும் தருணம் அரங்கேறியது. ஆனால் வழக்கமாக இல்லாமல், இதுவரை இல்லாத வகையில் பணப்பெட்டி வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது.

இதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் வர வேண்டும். அப்படி வருபவர்களுக்கு பணம் சொந்தமாகும். மேலும் அவர் போட்டியிலும் தொடரலாம். மாறாக குறித்த நேரத்துக்குள் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் மீண்டும் வரவில்லை என்றால், இத்துடன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே நிபந்தனை.

இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு முதல் நாள் பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தார். இவரைத் தொடர்ந்து ரயான் பணப்பெட்டியை எடுத்துள்ளார்.

முத்துக்குமரன் மீது விமர்சனம்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் வருகைப்புரிந்துள்ளார். அவர் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களிடம் தனித்தனியாக நேர்காணல் செய்கிறார்.

Story image

dinamani

இதில் செளந்தர்யா உடனான நேர்காணலின்போது, யார் சுயநலமாக விளையாடுகிறார் என்று நினைக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டார் மாகாபா. இதற்கு பதிலளித்த செளந்தர்யா, ’இந்த வீட்டுல முத்துக்குமரன் சேஃப் கேம் விளையாடுறாரு. ஆனா, கருத்து சொல்றேன்னு அவரே மாட்டிக்குவாரு’ என பதிலளித்துள்ளார்.

இதேபோன்று பவித்ரா உடனான நேர்காணலின்போது, பிக் பாஸ் வீட்டில் யார் மீது வருத்தம் உள்ளது எனக் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த பவித்ரா, ’முத்துக்குமரன் மேல வருத்தம் இருந்தது. கேப்டனாகத் தேர்வாகும் போட்டியில் விட்டுக்கொடுத்தேன் என்ற வார்த்தையை சொல்லாமல் இருந்திருக்கலாம்’ எனக் கூறினார்.

நேர்காணலில் இருவருமே முத்துக்குமரனை விமர்சித்துப் பேசியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.