

நடிகர் ஷாகித் கபூர், பூஜா ஹெக்டே நடித்துள்ள தேவா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் தேவா படம் 2025ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படம் வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, பூஜா ஹெக்டே விஜய்யின் 69 படத்தில் நடித்துள்ளார். சூர்யா 44 படத்திலும் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார்.
இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.
1 மணிக்கு வெளியாக வேண்டிய டிரைலர் சற்று தாமதமாக வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.