செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

தாமதமாக வெளியாகும் சூரியின் மாமன் பட முதல் பார்வை போஸ்டர்!

சூரி நாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜன.17) மாலை வெளியாகிறது.

சூரி-ஐஸ்வர்யா லக்‌ஷ்மி படத்தின் பூஜையின் போது. - கோப்புப் படம்

Published On :

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜன.17) மாலை வெளியாகிறது.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்வாசிகா தமிழில் சூர்யா - 45 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல்பார்வை போஸ்டர் நேற்று (ஜன.16) மாலை வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை.

இந்த நிலையில் இன்று (ஜன.17) மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.