பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

தன்பாலின காதலை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்: லிஜோமோல் ஜோஸ்!

காதல் என்பது பொதுவுடமை படம் குறித்து லிஜோமோல்..

Published On :

நடிகை லிஜோமோல் ஜோஸ் தன்பாலினத்தவர்களின் காதல் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது.

முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் வரும் காதலர் தினமான பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி வழங்குகிறார்.

Story image

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகை லிஜோமோல் ஜோஸ் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து பேசினார். அதில், “காதல் என்றால் அனைத்தும் காதல்தான். இப்படத்தில் நடித்தபின்பே தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் குறித்த புரிதல் ஏற்பட்டது. இந்திய சினிமாவில் இவர்களைப் பற்றிய கதைகள் பெரிதாக இல்லை. பெரும்பான்மை மக்களின் இருபாலின காதல்கள் தரும் அழுத்தத்தால் சிறுபான்மையினரான தன்பாலின ஈர்ப்பாளர்கள் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளைப்போல தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இருப்பதும் சாதாரண உணர்ச்சிதான் அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்பதையே காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் பேசியிருக்கிறது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.