ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மீண்டும் மாரியம்மாவாக நடிக்கக் காத்திருக்கிறேன்: துஷாரா விஜயன்

சர்பட்டா - 2 திரைப்படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்த துஷாரா விஜயன்...

arya and dushara vijayan

ஆர்யாவுடன் துஷாரா விஜயன்

Published On :

நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021 இல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

திரையரங்க வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் ஓடிடியில் வந்துவிட்டதே என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். காரணம், குத்துச் சண்டையை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல்களையும் பேசியிருந்தது.

தற்போது, சார்பட்டா - 2 பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதிலும், ஆர்யாவே நாயகனாக நடிக்கிறார். இதுவும் தமிழக அரசியலின் முக்கியமான காலகட்டத்தைப் பேசும் முதல் பாகத்திற்கு முந்தைய கதையாக உருவாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன், “சார்பட்டா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது. மிகவும் ஆவலாக, மீண்டும் மாரியம்மாக கதாபாத்திரத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன். சர்பட்டா முதல் பாகத்தின் கதைக்கு முந்தைய கதையாக இது உருவாகிறது. கரோனாவால் சர்பட்டா நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், இரண்டாம் பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Dushara Vijayan has spoken about the movie Sarpatta 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.