நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியுள்ளார்.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த பராசக்தி திரைப்படம், கடந்த பிப். 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம், “பராசக்தி திரைப்படம் ஏன் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு, ஆகாஷ், “பராசக்தி திரைப்படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு, சென்சார் பிரச்னைகள், இன்னொரு நடிகர் திரைப்படத்துடன் ஒரே நாளில் வெளியாகவுள்ள சர்ச்சைகள் என எதுவும் காரணமாக இருக்கலாம். மேலும், இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஒருவேளை, இது லாபத்தில் பங்கு (profit sharing) முறையில் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிரமம் ஏற்பட்டிருக்கும். இட்லி கடை எங்களுக்கு லாபகரமான படமாக அமைந்ததற்குக் காரணம் அது சிறிய பட்ஜெட் திரைப்படம். பராசக்தியைத் தோல்விப்படம் எனச் சொல்ல மாட்டேன். ஆனால், அதன் பட்ஜெட் மிகப் பெரியது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இதயம் முரளி திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. 20 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









