நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா - 2 . இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.1850 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான புஷ்பா 2 ராஜமௌலியின் பாகுபலி - 2 வசூலான ரூ. 1790 கோடியைக் கடந்து வசூலித்தது.
இதையும் படிக்க: மய்யத்திலிருந்து வருத்தத்துடன் வெளியேறுகிறேன்: விநோதினி
சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் புஷ்பா - 2 படத்தின் நீக்கப்பட்ட 23 நிமிடக் காட்சிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு 3.35 மணிநேரம் கொண்ட திரைப்படமாக திரையிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 3.35 மணிநேரம் கொண்ட புஷ்பா - 2 திரைப்படம் பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.