பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் ரூ. 300 கோடியைக் கடந்துள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் உருவானது.
சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படத்தில், நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், சஞ்சய் தத், ஜாக்கி ஷெரோஃப், சோனம் பஜ்வா மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் உலக அளவில் ரூ.300 கோடியும் இந்திய அளவில் ரூ.200 கோடியும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு ஹவுஸ்ஃபுல் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 2012, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் வரிசையாக வெளியான அடுத்தடுத்த பாகங்களும் வெற்றியடைந்தன.

ஹவுஸ்ஃபுல் 5 படத்தின் வசூல் போஸ்டர். - படம்: எக்ஸ் / சஜித் நதியாத்வாலா
சோனம் பாஜ்வா இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Bollywood actor Akshay Kumar's film Housefull - 5 has crossed Rs. 300 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சில் முன்னேற்றம்: பாராட்டுப் பெறாத நாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி!

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

பாசில் ஜோசப் - அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீடு அறிவிப்பு!

ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: அக்ஷய் குமார்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


