சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்ஷய் குமார் நடித்துள்ள ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் எஸ். எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பாசில் ஜோசப், அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர்கள் பாசில் ஜோசப் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தை கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Summary
Filming has concluded for the movie Raavadi, starring Akshay Kumar—who garnered attention as a lead actor through the film Sirai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டயங்கரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு! உற்சாகத்தில் விஜே சித்து ரசிகர்கள்!

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படத்தின் படப்பிடிப்பு விடியோ!

வினோதினி தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

பாசில் ஜோசஃப் நடித்த அதிரடி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



