
விமல் நடிப்பில் உருவான 'தேசிங்குராஜா-2' படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார்.
காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் விமல் நாயகனாக நடிக்க எழிலே இயக்கி வருகிறார். படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நாயகிகளாக நடிக்கிறார்கள்.
மேலும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளுசபா ஸ்வாமி நாதன் எனப் பெரும் காமெடி நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.
வித்யாசாகர் இசை அமைக்கிறார். வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. படம் ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது.
The trailer for Vimal's upcoming Tamil movie, "Desinguraja 2," has been released today, July 4th, 2025.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.