நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மீண்டும் வருகிறார் ஹாரி பாட்டர்..! இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்!

‘ஹாரி பாட்டர்’ இணையத் தொடரின் படப்பிடிப்பு குறித்து...

News image

ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தில் நடிகர் டொமினிக் மெக்லாஃப்லின்

Updated On :15 ஜூலை 2025, 1:03 pm IST

உலகப் புகழ்பெற்ற ”ஹாரி பாட்டர்” கதைகளின், இணையத் தொடர் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜே.கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவல்களை மையமாகக் கொண்டு உருவாகி 8 பாகங்களாக வெளியான ”ஹாரி பாட்டர்” திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் ஏராளம்.

அந்தக் கதைகளின் நாவல்கள் ஏராளமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நிலையில், 8 படங்களும் சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் வெற்றியடைந்தன.

90-ஸ் மற்றும் 2-கே கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தின் முக்கிய அங்கமாக விளங்கிய ஹாரி பாட்டர் கதைகள் தற்போது இணையத் தொடராகவும் உருவாகுகின்றன.

எச்.பி.ஓ. நிறுவனத்தின் தயாரிப்பில், புதிய நடிகர்களுடன், நாவல்களிலிருந்து இன்னும் ஆழமான கதைத் தழுவலுடன் இந்த இணையத் தொடரானது உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, எச்.பி.ஓ. நிறுவனம் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ஹாரி பாட்டர் படங்களின் முதல் பாகத்தில் இடம்பெற்ற பிரபல வசனமான, “ஃபர்ஸ்ட் இயர்ஸ் ஸ்டெப் ஃபார்வர்ட்” எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு துவங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இணையத் தொடரில், ஹாரி பாட்டர், ஹெர்மாயினி கிரேஞ்சர், ரான் வீஸ்லே ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் டொமினிக் மெக்லாஃப்லின், அரபெல்லா ஸ்டாண்டன் மற்றும் அலாஸ்டெயிர் ஸ்டௌட் ஆகியோர் நடிக்கின்றனர்.

‘ஸக்ஸெஷன்’ எனும் பிரபல இணையத் தொடரின் இயக்குநர் மார்க் மைலாட் இயக்கும் இந்தப் புதிய ஹாரி பாட்டர் இணையத் தொடர் வரும் 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.