அடுத்தடுத்து சின்ன திரையில் தோன்றும் சினிமா நடிகர்கள்!

சின்ன திரை தொடர்களில் சிறப்புத் தோற்றத்தில் சினிமா நடிகர்கள் நடிப்பது குறித்து..
சந்தியா, பாண்டியராஜன், மாளவிகா
சந்தியா, பாண்டியராஜன், மாளவிகாபடங்கள் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சின்ன திரை தொடர்களில் சிறப்புத் தோற்றத்தில் சினிமா நடிகர்கள் நடிப்பது வழக்கமானது.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களில் நடிகர் பாண்டியராஜன் மற்றும் நடிகை மாளவிகா நடிக்கவுள்ளனர்.

இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான வீரா தொடரில், நீதிபதி பாத்திரத்தில் நடிகர் பாண்டியராஜன் நடித்திருந்த நிலையில், மெளனம் பேசியதே தொடரில் சிறப்புத் தோற்றத்தில் தற்போது நடிக்கவுள்ளார்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு மெளனம் பேசியதே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகர் அசோக் மற்றும் ஃபெளசி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடரில் பாண்டியராஜன் நடிக்கவுள்ளதால், திருப்பங்களுடன் கூடிய நகைச்சுவை காட்சிகள் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மெளனம் பேசியதே
மெளனம் பேசியதே

இதேபோன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் நடிகை மாளவிகா நடிக்கவுள்ளார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகர் ரிச்சர்ட் ஜோஷ் மற்றும் பல்லவி கெளடா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதயம் தொடர்
இதயம் தொடர்

காதல் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை சந்தியா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மனசெல்லாம் தொடரில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் -2 தொடரில் நடிக்கும் கோலங்கள் வில்லன்? நடிகர் அஜய்யின் வைரல் விடியோ!

Summary

Actor pandiarajan actress malavika in zee tamil mounam pesiyathe idhayam serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com