பாலிவுட் நடிகர் அமிர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய திரைப்படம், யூடியூபில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். அவரது நடிப்பில், எழுத்தாளர் திவி நிதி சர்மா எழுதி, இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கிய ”சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லித் தரும் பயிற்சியாளராக, ஆமிர் கான் நடித்திருந்த இந்தப் படம், மொழிகளைக் கடந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம், சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை, எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, யூடியூபில் வெளியாகும் எனத் திரைப்படத்தின் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நடிகர் ஆமிர் கான் கூறுகையில், இந்தியாவில் திரையரங்குகள் கூட இல்லாதப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் காணும் வகையில், இந்தத் திரைப்படம் யூடியூபில் வெளியிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த, 2007-ம் ஆண்டு ஆமிர் கான் இயக்கத்தில், அவரது நடிப்பில் உருவாகி வெளியான, “தாரே ஜமீன் பர்” எனும் படத்தின், 2-ம் பாகமாக வெளியான இந்தப் படம், முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.11.7 கோடி (உள்நாட்டில் மட்டும்) வசூல் செய்திருந்தது.
மேலும், நடிகர் ஆமிர் கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சினிமாவிலிருந்து மம்மூட்டி ஓய்வு?
Summary
Bollywood actor Aamir Khan's new film "Sittaare Zameen Par" has been announced, as it was reported that it will be released on YouTube.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லவ் ஜிகாத்! காதல் திருமணம் செய்த நடிகர் ஆமிர் கானுக்கு மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பா?

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!
உங்கள் ஆசி வேண்டும்! 61 வயதில் நடிகர் ஆமிர் கான் 3-வது திருமணம்!

61 வயதில் தனது 3-ஆவது திருமண தேதியை உறுதிப்படுத்திய ஆமிர் கான்!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



