எனது சிறிய பெருங்குழப்பமே..! மகனுக்காக ஜெனிலியா உருக்கம்!

நடிகை ஜெனிலியா தனது மகன் பிறந்தநாளுக்காக நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
Genelia with his son. (pics From Insta, Genelia)
குழந்தையுடன் நடிகை ஜெனிலியா. படங்கள்: இன்ஸ்டா / ஜெனிலியா.
Published on
Updated on
1 min read

நடிகை ஜெனிலியா தனது மகன் பிறந்தநாளுக்காக ”நீதான் எனது பெருங்குழப்பம்” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஜெனிலியா (37) பாய்ஸ் படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் பல தமிழ்ப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

சமீபத்தில் சச்சின் மறுவெளியீட்டில் கிடைத்த வரவேற்புக்கு நெகிழ்ச்சியாக விடியோ வெளியிட்டிருந்தார்.

ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2014, 2016ஆம் ஆண்டு ரியான், ரகாயல் எனும் ஆண் குழந்தைகள் பிறந்தன.

தற்போது, 2-ஆவது ஆண் குழந்தை ரகாயல் பிறந்தநாளுக்காக ஜெனிலியா கூறியதாவது:

என் அருமை மகனே, நீதான் என் சிறிய பெருங்குழப்பம் - அது என்னை மென்மையானவளாகவும் வலுவானவளாகவும் மாற்றியுள்ளது.

ஒரு கணத்தில் என்னுடைய பொறுமையைச் சோதித்து எல்லாவற்றையும் குழப்பி, என்னை எப்போதும் கவனமாக இருக்க வைப்பாய், மறுகணத்தில் உன்னுடைய சிறிய விரல்களால் என் கழுத்தை சுற்றிப் பிடிக்கும்போது நான்தான் உனது மொத்த உலகம் என நினைக்கிறேன்.

உன்னுடைய அன்பு பெரியது, உன் அணைப்பு இறுக்கமாகவும் உனது சிரிப்பு களைப்பான எல்லா கணங்களையும் மதிப்பு மிக்கதாக மாற்றும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே, நீ தொல்லை தரும் குழந்தையாக இருந்தாலும் சரி அனைவரையும் அன்பாக நேசிப்பவனாக இருந்தாலும் சரி நீதான் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவன். எப்போதும் மாறாமலே இரு எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com