பாடலாசிரியர் பா. விஜய் மீது பண மோசடி புகாரொன்று அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ், அவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் சினிமா மற்றும் சின்ன திரை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
இதனிடையே, அருள்தாஸ் - லலிதா தம்பதி ஒரு புதிய திரைப்பட பாடல் இயற்றுவதற்காக பாடலாசிரியர் பா.விஜய்யை அனுகி முன் தொகையாக ரூ.50,000 கொடுத்துள்ளனர்.
பாடலாசிரியர் பா.விஜய் பாடல் வரிகள் எழுதுவதாக கூறி ரொக்கப் பணத்தை பெற்றுள்ளார்.
ஆனால், பாடல் எழுதாததால் கொடுத்த முன் தொகையை திருப்பி தருமாறு அருள்தாஸ் - லலிதா தம்பதியினர் கேட்டதாகவும் பணத்தைத் திருப்பி தர முடியாது என பா. விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அருள்தாஸ் - லலிதா தம்பதியின கடந்த 30-தேதி கொடுங்கையூர் பி-6 காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரில் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் ஒரு தலைபட்சமாக பா.விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அருள்தாஸ் - லலிதா தம்பதியரை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் ஆய்வாளர் சரவணன் என்பவர் பொய்வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டியதாகவும் லலிதா குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் அளித்தது யார்? : வினேஷ் போகத் விடியோவில் விளக்கம்
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
குழந்தைகளை அடம்பிடிக்க வைத்த விஜய்: மன உளைச்சலான விசிக நிர்வாகி புகார்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



