2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

லெவன் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

News image
Updated On :10 ஜூன் 2025, 6:48 am

DIN

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் வெளியான படம் 'லெவன்'. நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்னோட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Story image

இப்படம் கடந்த மே 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்துக்காக ’தமுகு’ என்ற சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டு, சரிகம தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், திரில்லர் படமான லெவன் திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.