16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

வெளியானது தனுஷின் குபேரா பட டிரைலர்

தனுஷ் நடிப்பில் குபேரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

குபேரா படத்தில் தனுஷ்.

Published On :

தனுஷ் நடிப்பில் குபேரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் குபேரா. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

சேகர் கம்முலா இதனை இயக்கியுள்ளார். படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோட் செய்ய அடுத்தடுத்து நிகழ்வுகளை 'குபேரா' படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. டிரைலரை பார்க்கும்போது படத்தில் தனுஷ் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் போல் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.