
அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் வெளியானது!
நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது.
கிளாடியேட்டர்ஸ் படத்தின் போஸ்டர். - படம்: யூடியூப் / அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்எல்சி
நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.
அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தயங்களில் அவரின் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.
இப்படத்தின் டிரைலர், தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், இணையத்தில் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், அவர் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Summary
Ajith Kumar's Gladiators trailer released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






