இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாமன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூரி மண்டாடி என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் மீனவர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவாகிறது.
அடுத்ததாக, சூரி யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல மலையாள இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் சூரி நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாள சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர்களில் ஒருவராக லிஜோ ஜோஸ் கருதப்படுகிறார். அவர் இயக்கிய, அங்கமாலி டயரிஸ், ஜல்லிக்கட்டு, சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
இந்தச் சூழலில் சூரி - லிஜோ ஜோஸ் கூட்டணி குறித்த தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?
வாரிசு இயக்குநர் இயக்கத்தில் சல்மான் கான்!

தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி?
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


