
பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன், கதாநாயகனாக அறிமுகமான “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படத்தை, ‘கருடன்’ பட இயக்குநரான துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில், மாறுபட்ட தோற்றத்தில் சரவணன் நடிப்பதாக வெளியான புகைப்படங்கள், அவரது ரசிகர்களிடையே மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன் கூறியதாவது:
"என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளும் நிறைவடையும்.
இந்த படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து சுவாரஸ்ய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்த படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.
SUMMARY
Legend Saravanan's new film to release for Diwali!
இதையும் படிக்க: கோலிவுட் சூப்பர்ஸ்டார்... விஜய்க்கு சிங்கப்பூர் தூதர் புகழாரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.