என் குறும்பர்கள்... மகன்களுடன் ரவி மோகன்!

மகன்களுடன் ரவி மோகன்...
ravi mohan and his sons
தன் மகன்களுடன் ரவி மோகன்
Published on
Updated on
1 min read

நடிகர் ரவி மோகன் தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளார். ஆனால், ஆர்த்தி சமரசத்திற்காகக் காத்திருப்பதுபோல் தெரிகிறது.

இந்தச் சூழலில், ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் தனியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து வழக்கு முடியும்வரை இருதரப்பினரும் அறிக்கை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

விவாகரத்து வழக்கு ஒருபக்கம் நடந்தாலும், மறுபுறம் பராசக்தி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்களில் ரவி மோகன் நடித்து வருகிறார். தற்போது, புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கியுள்ளார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரவி மோகன், “என் பெருமை. என் அனைத்து பருவங்கள்.. என் குறும்பர்கள்..” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Summary

actor ravi mohan with his sons amid divorce case against with ex wife aarti ravi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com