விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

நெருக்கமான, முத்தக் காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை: உன்னி முகுந்தன்

தன் படத்தேர்வுகள் குறித்து உன்னி முகுந்தன் பேசியுள்ளார்...

News image
Updated On :2 மார்ச் 2025, 12:57 pm IST

நடிகர் உன்னி முகுந்தன் முத்தக் காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான மார்கோ ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. பான் இந்தியளவில் தனக்கான மார்க்கெட்டையும் உன்னி முகுந்தன் உருவாக்கியுள்ளார்.

மேலும், இயக்குநர் வினய் கோவிந்த் இயக்கத்தில் உன்னி முகுந்தன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கெட் செட் பேபி’ (get set baby) திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய உன்னி முகுந்தன் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளைத் தன் படங்களில் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, “நான் அனைவருக்குமான நடிகனாக இருக்க விரும்புவதால் கடந்த 7 ஆண்டுகளாக நான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. அதிலும் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன். பலரும் முத்தக்காட்சிகளில் நடிப்பது ஒன்றும் தவறில்லை என சில உதாரண நடிகர்களைச் சொல்வார்கள்.

ஒரு ஆக்சன் காட்சியில் எப்படி சண்டைக் கலைஞர் உடலில் கை படாமலேயே அடித்த மாதிரி காட்டமுடிகிறதோ அதேபோல் நெருக்கமான காட்சிகளிலும் செய்யலாம். அதனால், நான் முத்தக்காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன். வேறு யாராவது அதை செய்தால் அதை தவறு என சொல்லமாட்டேன். என் திரைப்படத் தேர்வில் அவை இல்லை அவ்வளவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.