12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நானியின் தி பாரடைஸ் கிளிம்ஸ்!

தி பாரடைஸ் கிளிம்ஸ்...

Published On :

நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் நானி. சமீபத்தில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக ஹிட் 3 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது, தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த ஒடேலா உடன் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளார் நானி. தி பாரடைஸ் எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். பீரியட் படமாக உருவாகும் இதில் நானி கேங்ஸ்டராக நடிக்கிறார் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் 26.3.2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.