பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்குகிறது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.
பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: பாலிவுட்டிலிருந்து விலகிய அனுராக் காஷ்யப்!
இந்த நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்க உள்ளதாம். இதற்காக, அடுத்த வாரம் படக்குழு இலங்கை செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு, யாழ்பாண நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.