பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரசிகர்கள் மாறிவிட்டார்கள்..! திரைத்துறை அனுபவம் பகிர்ந்த ஷில்பா ஷெட்டி!

நடிகை ஷில்பா ஷெட்டி திரைப்பட விழாவில் சினிமா அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

News image
நடிகை ஷில்பா ஷெட்டி- படம்: எக்ஸ் / ஷில்பா ஷெட்டி
Updated On :8 மார்ச் 2025, 5:50 am

DIN

நடிகை ஷில்பா ஷெட்டி ஜகரான் திரைப்பட விழாவில் ரசிகர்கள் மாறிவிட்டதால் சரியான படங்களை தேர்வு செய்ய வேண்டுமென பேட்டியளித்துள்ளார்.

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

திரையரங்கில் கடைசியாக வெளியான சுகி படத்தில் 2023இல் நடித்திருந்தார். 2024இல் அமேசான் பிரைமில் வெளியான இந்தியன் போலீஸ் போர்ஸ் தொடரிலும் நடித்திருந்தார்.

கேடி தி டெவில் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள ஷில்பா ஷெட்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சினிமாவில் கடினமான காலகடத்தில் இருக்கிறோம். இன்றைய சினிமாவில் ஆண் அல்லது பெண் பார்வையாளர்களில் கவனத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. நல்ல கதைகளைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்போது ரசிகர்கள் மாறிவிட்டார்கள்.

49 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ஷில்பா ஷெட்டி.

49 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ஷில்பா ஷெட்டி.

தற்போது சினிமாக்களை பார்க்க பல விதமான முறைகள் இருக்கின்றன. பல ஓடிடி தளங்கள் உள்ளதால் அவர்களது தேர்வு பிரிந்து கிடக்கிறது. அதனால் நடிகர்கள் சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும்.

பல ஓடிடிகள் இருப்பது ஒரு வகையில் வரமும் சாபமும் ஆக இருக்கிறது. இருமுனைக் கத்தியாக இருக்கிறது.

படங்களில் நடிக்காதபோதும் எனக்கு ஓடிடி ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். ஓடிடி பார்வையாளர்களை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம்.

சில நேரங்களில் படங்கள் தோற்றாலும் பாடல் ஹிட்டாகும். அதனால்தான் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்தேன் என நினைக்கிறேன். ஓவ்வொரு பாடலும் எனக்கு மைல்கற்கள்தான்.

சில படங்களில் நன்றாக நடித்தும் கவனம் பெறாமல் சென்றுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.