'குக் வித் கோமாளி' கேமிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு!

குக் வித் கோமாளியில் புகழ் பெற்ற நடிகை கேமிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
கேமி என்னும் வைஷாலி கேமாகர்
கேமி என்னும் வைஷாலி கேமாகர் இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் புகழ் பெற்ற நடிகை வைஷாலி கேமாகர் எனப்படும் கேமிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ஆபிஸ் என்ற இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்றுள்ளார். அதோடு மட்டுமின்றி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளார்.

வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர் நடிகை கேமி. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

கேமியின் வசீகரமான தோற்றமும், நகைச்சுவை உணர்வும் ஏராளமான ரசிகர்களை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதனை சரியான விதத்தில் பயன்படுத்துக்கொண்ட கேமி, தனது அடுத்தடுத்த வாய்ப்புகளில் கடினமாக உழைத்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் விளைவாக ஆபிஸ் என்ற இணையத் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கேமிக்கு கிடைத்தது. இதிலும் சிறப்பாக நடித்ததால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

கேமி
கேமிஇன்ஸ்டாகிராம்

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் கேமி போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இவருக்கு ஜோடியாக அருண் நடனமாடுகிறார்.

அருண் / கேமி
அருண் / கேமிஇன்ஸ்டாகிராம்

இந்த நிகழ்ச்சியில் நடிகை சினேகா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இந்த நடன நிகழ்ச்சியில் கேமியின் நடன திறமையையும் காண ரசிகர்கள் ஆவலுடம் எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிக்க | கார்த்திகை தீபம் தொடரில் இணையும் சண்டக்கோழி நடிகர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com