எங்கள் மகளின் புகைப்படங்களை எடுக்காதீர்கள், மீறினால் சட்ட நடவடிக்கை: ரன்பீர் - ஆலியா பட்

பிரபலங்களின் குழந்தைகள் புகைப்படங்கள் எடுப்பது குறித்து...
குழந்தை, கணவருடன் ஆலியா பட்.
குழந்தை, கணவருடன் ஆலியா பட். படங்கள்: இன்ஸ்டா / ஆலியா பட்.
Published on
Updated on
1 min read

பாலிவுட் தம்பதிகளான ஆலியா பட், ரன்பீர் தங்களது மகள் ராஹாவின் புகைப்படங்களை எடுக்க வேண்டாமெனக் கூறியுள்ளார்கள்.

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் இருவரும் பாலிவுட்டில் முன்னனி நடிகர், நடிகையாக இருக்கிறார்கள்.

இருவரும் கடந்த ஏப்.14, 2022இல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தை அதே ஆண்டு நவ.6ஆம் தேதி பிறந்தது.

ஏற்கனவே இந்தக் குழந்தையின் புகைப்படங்களை பபார்ஸி (தொழில்முறை புகைப்படக்காரர்கள்) எடுக்க வேண்டாமெனக் கூறியிருந்தனர்.

தற்போது, மீண்டும் இது குறித்து பேசியுள்ளார்கள். ரன்பீர், ஆலியா பேசியதாவது:

குழந்தையைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்

இது ஒரு தனிச்சலுகை பிரச்னையாகக் கூட தோன்றலாம். ஆனால், பெற்றோர்களாக நாங்கள் எங்களது குழந்தையைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்.

இன்று அனைவரும் செல்போன்களை வைத்துள்ளோம். எதை வேண்டுமானாலும் பதிவிடலாம். அது இணையத்தில் தீயாக பரவும். அதனால், அது எங்கள் கைகளில் கிடையாது.

பபார்ஸி (தொழில்முறை புகைப்படக்காரர்கள்) ஆகிய நீங்கள் எங்களது குடும்ப உறுப்பினர் மாதிரி. அதனால் உங்களிடம் மட்டும்தான் இதைக் கேட்க முடியும். இது வெற்றிபெற நீங்கள்தான் உதவ வேண்டும்.

மீறினால் சட்ட நடவடிக்கை

நான் மும்பையில் பிறந்தேன். நீங்கள் அனைவரும் எனது குடும்பம்தான். ஊடகங்களிடம் நாங்கள் கேட்கும்போது நீங்களும் அதை சரியாக செய்கிறீர்கள். நாம் இருவருமே சொன்னதைச் செய்கிறோம்.

ஆனால், மீண்டும் மீண்டும் இதை மீறுவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றே நினைக்கிறேன். .

நடிகர் நடிகைகள் வாழ்க்கைக் குறித்து அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். ஆனால், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைய அனுமதியில்லை என்றார்கள்.

பிரபலங்களின் குழந்தைகள் தனியுரிமை இந்த சமூக வலைதள காலகட்டத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com