நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் டப்பிங் சீரியல்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாற்று மொழித் தொடர் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது.
ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழில் நேரடியாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்படுகிறது. இன்று முதல் (மார்ச் 17) இத்தொடர் ஜீ தமிழில் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழ் சின்ன திரையில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்து ஒளிபரப்பாகும் தொடர்கள் கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது. பல தமிழ் சின்ன திரை தொடர்கள் மாற்று மொழித் தொடர்களுக்கு இணையாக பெரும் பொருள் செலவுடன் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே தற்போது கன்னடத்தில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சீதா ராமன் தொடர், தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்படவுள்ளது. இத்தொடருக்கு ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜீ தமிழில் சீதா ராமன் என்ற பெயரில் சமீபத்தில் பிரியங்கா நல்காரியின் தொடர் ஒளிபரப்பானது. பின்னர் பிரியங்காவுக்கு பதிலாக அதில், ஸ்ரீ பிரியங்கா நடித்து வந்தார்.
இதனால், இந்த கன்னட மொழித் தொடருக்கு ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனியாளாக வாழ்ந்து வரும் சீதையின் (நாயகி) வாழ்க்கையில் ராமனின் (நாயகன்) வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது?
ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ணமயமாகுமா? என்பது தான் இந்தத் தொடரின் மையக் கரு.
ஏற்கனவே கணவனை இழந்த ஒரு பெண், தனது பெண் குழந்தையுடன் வசித்து வரும்போது, நாயகன் அவளை திருமணம் செய்துகொண்டதால் என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இதயம் தொடர் ஒளிபரப்பானது.
தற்போது அந்தத் தொடரின் சாயலில் மாற்று மொழித் தொடர் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | இதயம் தொடரிலிருந்து விலகும் ஜனனி! காரணம் பகிர்ந்து உருக்கம்!
இதையும் படிக்க | வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சீரியல் நடிகை கோமதி பிரியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.