
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த செவ்வந்தி தொடர் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் 'செவ்வந்தி'. இத்தொடர் கடந்த 2022 ஜூலை 11 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் மகராசி தொடர் பிரபலம் திவ்யா ஸ்ரீதர் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இத்தொடரில் நக்ஷத்ரா, நிதிஷ் கிரிஷ், வினோத், பிரியங்கா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
செவ்வந்தி என்ற பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. செவ்வந்தி தன் கணவர் இறந்த பிறகு தன் குடும்பத்தை ஒற்றை ஆளாக எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.
இத்தொடர் தற்போது 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. செவ்வந்தி தொடரை இல்லத்தரசிகள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். 800 நாள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தொடர் குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் டப்பிங் சீரியல்!
ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இத்தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வந்தி தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.