‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

புதிய தொடரில் ரேஷ்மாவுடன் இணையும் சுந்தரி சீரியல் நடிகர்!

ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் புதிய தொடர் தொடர்பாக...

Published On :16 செப்டம்பர் 2025, 1:35 pm IST

புதிய தொடரொன்றில் நடிகை ரேஷ்மா முரளிதரன் மற்றும் சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். இவர், தற்போது ரோஜா - 2 தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய தொடர் ஒன்றில் நடிகர் ஜிஷ்ணு மேனன், ரேஷ்மா முரளிதரன் உடன் இணைந்து நடிக்கவுள்ளார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா, தொடர்ந்து பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

மிஸ் மெட்ராஸ் 2016-ல் இரண்டாம் இடம் பிடித்து, சின்ன திரையில் நுழைந்த இவரை, இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கும் புதிய தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்தொடரின் முன்னோட்ட விடியோ, ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.