11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தனுஷுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ?

தனுஷ் படத்தில் மமிதா பைஜூ...

News image
Updated On :19 மார்ச் 2025, 6:52 am

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேபோல், தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

தற்போது, ஆனந்த் எல் ராய் இயக்கிவரும் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்ததும், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் இணைவார் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.