தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மாநில முதல்வரானால் என்ன செய்வீர்கள்? சுவாரஸ்யமாக பதிலளித்த டொவினோ தாமஸ்!

எம்புரான் நிகழ்வில் டொவினோ தாமஸ்...

News image

டொவினோ தாமஸ்

Updated On :24 மார்ச் 2025, 4:43 pm IST

எம்புரான் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் டொவினோ தாமஸ் சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இதில் நாயகனாக மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் பேச வந்த டொவினோ தாமஸ் ஸ்டைலான ஆடையை அணிந்திருந்தார். உடனே, தொகுப்பாளர், “ஸ்டைலான முதல்வரை (எம்புரான் படத்தில் டோவினோ முதலமைச்சராக நடித்துள்ளார்) இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார்.

இதைக்கேட்ட டொவினோ, “இனி அடுத்த தலைமுறையில் இப்படித்தான் முதல்வர்கள் இருப்பார்கள்” என்றதும் அரங்கில் பலரும் கைதட்டினர்.

மேலும், “லூசிஃபர் படத்தில் ஒரு சில காட்சிகளில்தான் நடித்திருந்தேன். ஆனால், அப்படம் என் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் எம்புரான் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, “நீங்கள் முதல்வரானால் என்னென்ன மாற்றங்களைச் செய்வீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொவினோ, “நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும். ஆனால், இது பெரிய விஷயம் என்பதால் நான் யோசித்து, திட்டமிட்டு செய்ய வேண்டியதை குறித்துவிட்டு வருகிறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.